Breaking News

Local News

சீனாவிற்கு அடிமை சாசனம் கொடுத்த இலங்கை? அச்சத்தில் அண்டைய நாடு

இலங்கை சீனாவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஒரு நாடாக மாறி வருகின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்குள் சீனா செலுத்திவரும் அபரிமிதமான செல்வாக்கு என்பது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கி வருகின்றது. சீனா தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தியும் மிரட்டியும் இயலக்கூடிய நாடுகளை …

Read More »

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் !

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்துள்ள ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் இன்னும் கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க மொத்தம் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இதுபோன்ற சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்களை வெளியிடுவதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை …

Read More »

மட்டக்களப்பு தமிழர்களின் பெரும் ஆபத்து: தாமதித்தால் அழிந்து போவீர்கள்! இரா.துரைரெத்தினம்

‘நிர்வாகப்பயங்கரவாதம்’ என்ற ஒரு புதிய சொல்லை இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் அரசியல்வாதிகள் பாவிக்க தொடங்கி இருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காபிர் நசீர் அவர்கள் நாடாளுமன்றத்திலும் தொலைக்காட்சி விவாதத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களாக இருக்கும் நிர்வாக அதிகாரிகள் நிர்வாக பயங்கரவாதிகள் என்றும் மாவட்ட செயலகங்களிலும் பிரதேசங்களிலும் ‘நிர்வாக பயங்கரவாதம்’ நிலவுகிறது என சொல்லியிருந்தார். டிசம்பர் 30ஆம் திகதி ஓட்டமாவடி பிரதேச சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் …

Read More »

தீப்பந்தங்களுடன் வீதிக்கு வந்த மக்கள் : நள்ளிரவில் அரசாங்கத்தை எதிர்த்து !

நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் பொருளாதார வீழ்ச்சி உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருட்களின் தட்டுப்பாடுகள் போன்றவற்றை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக பொத்துவில் அறுகம்பையில் தீப்பந்தங்களை கைகளில் ஏந்தி ஐக்கிய மக்கள் சத்தியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தீப்பந்த ஆர்ப்பாட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை – பொத்துவில் தொகுதியின் பிரதான அமைப்பளார் அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் றஹ்மான் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று இரவு பொத்துவில் அறுகப்பை …

Read More »

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அரிய வகை உயிரினம்!

கொலன்னாவ கொப்பகந்த பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை முள்ளம்பன்றி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எம்.பியதிஸ்ஸ என்பவரின் வீட்டுக்கு அருகாமையில் காணப்பட்ட பொறியொன்றில் சிக்கியிருந்த இந்த முள்ளம்பன்றி தொடர்பில் அவர் உடவலவ வனவிலங்கு காரியாலயத்திற்கு அறிவித்துள்ளார். உடன் விரைந்த அதிகாரிகள் முள்ளம்பன்றியை பாதுகாப்பாக மீட்டு, அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர். இவ்வாறான முள்ளம்பன்றிகள் மிகவும் அரிதானவை எனவும், பொறியில் சிக்கியதனால் படுகாயமடைந்துள்ளதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வனவிலங்கு திணைக்கள அதிகாரி விஜித பெரேரா …

Read More »

இலங்கையில் வருகின்றது புதிய நடைமுறை!

இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர் மற்றும் யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளொக் செயின் (Blockchain) எனப்படும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க (Tamitha Wickramasinghe) தெரிவித்துள்ளார்.  இது இளைஞர்களின் …

Read More »

தமிழர் ஆலயங்களில் கைவரிசை காட்டிய இராணுவச் சிப்பாய் கைது!

காங்கேசன்துறை காவல் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெல்லிப்பழை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை காவல் நிலைய பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன. அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள …

Read More »

அடையாள அட்டை பெறுவதற்கு : கட்டாயம் இலங்கை குடிமக்கள் தெரிந்திருக்க வேண்டிது !

தேசிய அடையாள அட்டை என்பது ஒவ்வொரு இலங்கை பிரஜையினதும் மிக முக்கியமான அங்கமாகும். ஒருவரின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணமாக அடையாள அட்டை கருதப்படுகின்றது. எனினும், அதன் அவசியத்தினையும் தேவையினையும் அறியாத மக்கள் அதிகமுள்ளனர். இந்நிலையில், தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம், அதனை பெற்றுக் கொள்ளும் வழிமுறை தொடர்பாக இந்த பதிவின் ஊடாக நாம் காணலாம். தகுதிகள்… இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும். 15க்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவராக …

Read More »

வலையில் சிக்கிய அபூர்வ மீன்! ஒரே இரவில் லட்சாதிபதியான மீனவர்!

இந்தியாவில் மீனவர் ஒருவர் ஒரே மீனை பிடித்து பல லட்ச ரூபாய் வரை சம்பாதித்துள்ள நிகழ்வு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் ஜீவா. இவர் மீன் பிடித்தல் தொழிலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் கடலுக்கு சென்றுள்ளார். மீன் பிடிக்க வலை வீசியவருக்கு சில நிமிடங்களில் பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. வலையை விரித்திவிட்டு மீனை பார்த்தவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. காரணம் அந்த மீன் யாருக்கும் …

Read More »

இந்த தவறை செய்யாதீர்கள்! இலங்கை தமிழரான கனேடிய பிரபலம் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

மது அருந்திவிட்டு எந்த சூழ்நிலையிலும் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி கனேடிய நாடளுமன்ற உறுப்பினரான இலங்கை தமிழர் Gary Anandasangaree வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree பெரிய வெற்றியை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்த நிலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்பதை கூறும் விழிப்புணர்வு வீடியோ …

Read More »